பலனற்ற சாதனைகள்:

அர்ச்சகர் வெங்கட்ராமனின் மகள் மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்கள் மூத்த மகன் சுந்தரம் ராமநாதபுரத்தில் உள்ள கோயிலில் புரோகிதம் செய்து வருகிறார் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி அன்று 398 ஸ்டார்களை வாயில் வைத்து சாதனை புரிந்தவர் இவரது தம்பி வே சங்கர நாராயணனும் கின்னஸ் சாதனையாளர் இவர் ஒரே மூச்சில் 151 எதையும் மொத்த மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளார் அண்ணன்கள் சாதனை செய்வதை பார்த்து தானும் சாதிக்க வேண்டும் என்று தங்கை ரமாவும் கின்னஸ் சாதனை செய்துள்ளார் பெண்கள் தலைமுடியில் மாற்றும் ஹேர் கிளிப்புகள் 549 வகையான கிளிப்புகளை சேகரித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார் இதேபோன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான சாதனைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ஆயினும் முயற்சி செய்தால் எதுவும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை இவை வழங்கியுள்ளன

இரண்டுவித சாதனைகள்:

சாதனை என்பது நல்ல விஷயங்களிலும் உண்டு தீய விஷயங்களிலும் உண்டு ஆனால் நன்மைகளில் சாதனை என்பது முயற்சி செய்து பெறப்பட வேண்டிய ஒன்றாகும் தீய விஷயங்களில் சாதனை என்பது அப்படிப்பட்டதல்ல அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்

நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு: முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி:

கிபி 500 ஆம் ஆண்டு முதல் 1500 ஆம் ஆண்டு வரையுள்ள காலம் மத்திய காலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை கல்வி கலாச்சார ரீதியில் பெரிய வீழ்ச்சியைக் கண்டு இருந்தன இதேவேளை கிறிஸ்தவ யுத்தத்தையே தொடங்கியிருந்தது

மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H. G.WELLS தனது நூலில் முதன்முதலில் கிரேக்க தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர் அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம்முறையை தொடங்கினர் அரிஸ்டாட்டில் விதைத்த தத்துவம் அலெக்ஸாண்டிரியாவில் புகழ்பெற்ற நூதன சாலையில் கவனிப்பாரற்று கிடந்தது இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின என்று குறிப்பிடுகின்றார்

அழிவின் விளிம்பில் இருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்து இருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் பொக்கிஷங்கள் இன்றைக்கு உலகுக்கு கிடைக்காது போயிருக்கலாம் அழிவிலிருந்து அறிவியலை பாதுகாத்த மை முஸ்லிம்கள் உலகுக்குச் செய்த மிகப்பெரிய சேவையாகும்

C.E.STORSS என்ற அறிஞர் MANY GREEDS - ONE CROSS என்ற நூலில்....... 

இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம் தத்துவம் போன்ற ஒளி சுடர்களை உயரப் பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சேரும் அவர்களே அரிஸ்டாட்டில் பிளேட்டோ யூக்ளிட் ஆகியோரின் நூல்களை அரபு மொழியில் மொழி பெயர்த்து பாதுகாத்தனர் அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று குறிப்பிடுகின்றார்

ஐரோப்பாவில் லௌகீகத்துறையிலும் ஆன்மீகத் துறையிலும் அறியாமை இருள் சூழ்ந்திருந்த போது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்புவாய்ந்த நாகரீகத்தையும் ஸ்திரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள் கலை விஞ்ஞானம் தத்துவம் கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் அக்யனாஸ் தாந்தே ஒன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்க தவறில்லை முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளி விளக்கைப் போல விளங்கியது

இறுதியாகவும் ஒட்டு மொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்கு ஆற்றிய பங்கு பற்றி கூறுவதாயின் பேராசிரியர் பிலிப் கே.ஹிட்டி HISTORY OF ARABS எனும் தனது நூலில் கூறுவது போன்று மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றியவர்கள் இன் அரேபியர்களை போல வேறு எவருமில்லை என்று கூறலாம்

அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும் இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல் துறை சாதனைகள் பற்றி இங்கு கூறப்படுகிறது

Comments

Popular Posts