சாதனையாளர்கள் ஓர் பார்வை
ஒரு மனிதன் செயற்கரிய செயல் செய்யும்போது அந்த செயலை சாதனை என்கிறோம் முதல் மனிதன் தொட்டு இன்று வரை பல்வேறு துறைகளில் ஒவ்வொருநாளும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகிறது ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது நல்ல வேலை பெறுவது தொழிலில் வெற்றி பெறுவது என தொடங்கி மனித சமூகத்தின் இயக்கத்திற்காக பல கண்டுபிடிப்புகளை அந்த விஞ்ஞானிகள் சமூக அவலங்களை நீக்க பாடுபட்ட போராளிகள் தத்துவஞானிகள் வரை அனைவரும் சாதனையாளர்கள் தான் சாதனையாளர்களை கௌரவிக்க வே விருதுகள் பட்டங்கள் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன ஆயினும் இந்த சாதனைகள் மனித சமூகத்திற்கு என்ன பலனை அளித்தன என்பதிலேயே அதன் உண்மையான வெற்றி இருக்கிறது அத்தகையோர் உண்மையான சாதனையாளர்கள் நம் செயலையும் வாழ்வையும் முறைப்படுத்தும் பொழுது நம்முடைய சக்தி ஒருமுறை படுத்தப்பட்டு வீணாகாமல் மேலெழுத்து நம் தாழ்ந்த செயலை உயர்ந்த செயலாக சாதனைக்குரிய செயலாக மாற்றுகிறது அந்த முறைப்படுத்தப்பட்ட சக்தியுடன் நம்முடைய திறமையும் அறிவும் சேரும்பொழுது அற்புதம் நிகழ்கிறது உதாரணத்திற்கு சிறு குழந்தையை எடுத்துக் கொள்வோம் அந்த குழந்தையின் சக்தி காட்டாற்று வெள்ளம் போல் வெளிப்படுகிறது அதையே ஒழுங்காக ஒரு திறமையாக மாற்ற பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம் அங்கே கல்வி போதிக்கப்பட்டு குழந்தையின் அறிவு மேலோங்கி முறைப் படுத்தப்படுகிறது இதனால் குழந்தையின் அறிவு விரிவடைந்து பயனுள்ளதாக மாற்றப்படுகிறது வாழ்விலே குழந்தைக்கு ஒரு லட்சியம் சாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்படுகிறது நம் எல்லோருக்கும் சக்தி திறமை நேரம் என்பவை எல்லாம் நம் கைக்குள் இருக்கின்றன இவை யாவற்றையும் நாம் சரியான முறையில் சரியான செயல் முறைப்படுத்தி செயல்பட்டால் சாதனை என்பது அன்றாட நிகழ்ச்சி ஆகும் இன்று வாழ்க்கையில் சாதித்த அவர்களையும் மற்றவர்களையும் கூர்ந்து நோக்கினால் சாதித்தவர்கள் தங்கள் வாழ்க்கையை முறைப்படுத்தி கட்டுக்கோப்பாக அமைத்து நடத்திச் சென்றது தெளிவாகத் தெரியும் வாழ்வில் தோற்ற அவர்களுடைய வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால் அவர்கள் ஒரு குறிக்கோள் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தறிகெட்டு செயல்பட்டது தெரியும் இதற்கு மாறாக கட்டுப்பாடில்லாத வாழ்க்கை உடையவன் வாழ்வில் தொடர்ந்த தோல்வியை சந்திப்பவர்கள் இருப்பான்.
சோதனையை வென்ற சாதனையாளர்கள்:
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில் குணத்தில் திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர் ஆனால் யாரும் பொறுமையோடு படைக்கப்படுவதில்லை குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன அதை பெரிதாய் நினைத்து வருந்தி அவன் உலகையே வெறுத்துப்போய் பார்க்கிறான் அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப்பார்க்க வைக்கிறான்.
சில உதாரணங்கள்: ஹெலன் கெல்லர்: இளம் வயதில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் பார்வை பேச்சு கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர்கள் பலர் சுமார் 40 நாடுகளுக்கு பயணம் செய்து மாற்றுத்திறன் கொண்டவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினார் உலகிலுள்ள மாற்றுத்திறன் கொண்ட மக்களுக்கான போராளியாக கருதப்பட்டார் ஹெலன்.
ஸ்டீபன் ஹாக்கிங்:
கை கால் முழுவதும் செயலிழந்து வீழ்சேர் இலேயே வாழ்க்கை கனிந்த போதும் இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை சார்பியல் மற்றும் குவாண்டம் தீர்ப்பில் அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் இவரது பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம் என்ற புத்தகம் விற்பனையில் பல சாதனைகளை நிகழ்த்தியது
ஜான் நேஷ்:
நோபல் பரிசு பெற்ற இவர் கணிதத்திற்கு மிகப் பெரும் பங்காற்றியவர் இவர் கண்டுபிடித்த ஆட்டக் கோட்பாடு பொருளாதாரம் அரசியல் உயிரியல் கணினி அறிவியல் என பல இடங்களிலும் பயன்படுகிறது சைதன்யா என்னும் மன நோயால் பாதிக்கப்பட்ட ஜாமெட்ரி டிபரன்சியல் சமன்பாடு முதலியவற்றிற்கும் முன்னோடியாய் திகழ்ந்தவர் இன்னும் ஏனையோர்
சாதனைப் படிப்பினை தரும் யூதர் துறவி:
ரோமானியர்கள் ஆல் ஜெருசலம் ஆலயம் இடிக்கப்படும் முன்பே பல்லாண்டுகளாக அக்கோயிலில் வசித்துவந்த பெண் காய் என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர் மாபெரும் யூத சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவுவது என்கிற பெருங் கனவின் முதல் செங்கல் இந்த யூதத் துறவினாலேயே முதன் முதலில் எடுத்து வைக்கப்பட்டது
புத்தியால் வெல்வது என்கிற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு யூதரின் மனத்திலும் மந்திரம் போல பரவிப் படர்ந்தது அறிவுப் புரட்சியை ஆரம்பித்தார்கள் இன்றைக்கும் சர்வதேச அளவில் தொழில்நுட்பத்திலும் நவீன வேளாண்மையிலும் தலை சிறந்தவர்களாக யூதர்களே விளங்குவதை பார்க்கலாம் இந்த வளர்ச்சிக்கான வித்து அன்று ஊன்றப்பட்டது தான்
தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது சென்னையில் வசித்து வரும் மொழி பிரியன் அவர்களின் மகன் அக்ரம் பத்து வயது ஆகியுள்ள இச்சிறுவன் உலக இளம் வயது தட்டச்சு சாதனையாளன்(World youngest multilingual Typist) என்ற விருதினை பெற்றுள்ளான் பழமொழிகளின் ஆற்றலையும் தனது ஏழு வயது முதல் கற்று வந்துள்ளார் 400 மொழிகளில் வேகமாக டைப்பிங் செய்யும் அபாரத் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறாள் இதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் தேசிய கீதமான ஜன கான மன வை சுமார் 40 மொழிகளில் பார்க்காமல் இரண்டு மணி நேரத்தில் எழுதி முடித்து விடுகிறார்
Veri good
ReplyDeleteThanks
Delete